ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

தமிழ் நாடு ஈழத்திற்கு இதையாவது தருமா..?

ஈழத்தமிழர் மீண்டும் ஒரு முறை தமிழக அரசிடம் வேண்டி நிற்க வேண்டிய தருணம் வந்திருக்கிறது. இதையாவது முதல்வர் கண்டு கொள்வாரா.. அல்லது பசப்பு வார்த்தை பேசி நழுவிக் கொள்வாரா தெரியவில்லை.

சம்பவம் இது தான் 2008 ம் ஆண்டளவில் நாமக்கல் மாவட்டத்தில் பொலிஸாரால் ஒரு சிலை கைப்பற்றப்பட்டது. இது முருகக் கடவுளின் பஞ்சலோகச் சிலையாகும்.

அப்போது இது பற்றி பல குழப்பங்கள் இருந்தாலும் பின்னர் ஈழத்தவரால் அதற்கு உரிமை கோரப்பட்டது. இச்சிலை திருகோணமலை மாவட்டம் மூதூர் பகுதியில் இருக்கும் சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்திற்கு சொந்தமானது என கூறப்பட்டது. அது அங்கிருந்து கடத்தப்பட்டே இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

(யாரோ போக்கத்ததுகள் தமிழ் சினிமா பாத்து செஞ்சு பாத்திருக்குறானுகள்.....இது தானுங்க அந்த இடத்து பேச்சு மொழி..) அதன் பின் அச்சிலை திருச்சியில் இருப்பதாக ஒரு தகவல் இருந்தது. இப்போது சீராக மாறியிருக்கும் அரசியல் சூழலை அடுத்து மீண்டும் அச்சிலை கொண்டு வருவது பற்றிய பேச்சு எழுந்துள்ளது. அனால் ஒரு விடயம் மட்டும் உறுத்தலாகவே உள்ளது. தமிழக அரசு கொடுப்பதற்கு சம்மதித்துள்ளது என்றொரு கதை அடிபட்டாலும் உத்தியோகபூர்வமாக ஆலய நிர்வாகத்திற்க கடிதம் எதுவும் அனுப்பப்படவில்லை. ஆனால் ஆலய நிர்வாகம் தமிழகம் போவதற்க தயாராக இருப்பதாகவே கூறுகிறது.

(அழையாதார் வாசல் மிதிக்க அவர்கள் என்ன தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களா..? இது தமிழக அரசுக்கும் கூட்டமைப்பு பாராளுமன்றத்தாருக்கு மட்டும் எழுதப்பட்ட வாசகம்)

ன்றி - மதியோடை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக