உலகில் நடைபெறும் அழிவுகளை தடுப்பதில் ஐக்கிய நாடுகள் சபை செயற்திறனற்று உள்ளது. அதன் செயற்பாடுகள் சிறீலங்கா உட்பட பல இடங்களில் தோல்வி கண்டுள்ளதாக த பமிலி செக்குரிட்டி மற்றேர்ஸ் எனப்படும் இணையத்தளத்தில் எழுதிய பத்தியில் விரிவுரையாளர் டைனா பார்ஹட் கொல்ஸ்மன் தெரிவித்துள்ளார்.
அதில் சிறீலங்கா தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:
சிறீலங்காவில் கடந்த 26 வருடங்களாக இடம்பெற்ற போர் கடந்த வருடம் நிறைவுபெற்றிருந்தது. பொரும்பான்மை சிங்களவர்கள் அதில் வெற்றிபெற்றிருந்தனர். போர் வலையத்திற்குள் தங்கியிருந்த தமிழ் மக்களுக்கு உணவை வழங்காது, அவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு துன்புறுத்தியே இந்த போர் வெல்லப்பட்டுள்ளது.
இது ஒரு வெளிப்படையான மனித உரிமைமீறல். இனஅழிப்பும் அங்கு நடந்துள்ளது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் முன் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் செயற்திறனற்று போய்விட்டன.
தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் யாரும் கவனம் செலுத்தவில்லை. ஏன் அவர்கள் அவ்வாறு உள்ளனர்? அவர்களுக்கு அதனால் துன்பங்கள் ஏதும் ஏற்படவில்லை என்பதால் தான்.
காசா, மியான்மார், சீனாவின் திபத்து, ஈரான் போன்ற நாடுகளில் இடம்பெறும் வன்முறைகளையும் யாரும் கண்டுகொள்வதில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக