வியாழன், 23 செப்டம்பர், 2010

நடுகற்கள்


வீரத்தின் சாட்சியாய்
வாழும் உயிருள்ள நடுகற்கள்
வாதத்தை மட்டும் ஏற்று
நீதிவழங்கும் நாட்டில்
குற்றவாளிகள்
கடல் வற்றிய பூவிகோள் கண்கள்
எலும்புகூட்டை போற்றிய தோல்கள்
எதற்கு உண்கிறோம்
ஏன் வாழ்கிறோம்
என உணர்வற்ற உடல்கள்
உலகெமெங்கும் தமிழ்தீயை மூட்டும்
உருவங்கள்
புதைத்த உறவு மீள வரும்
எரித்த சாம்பலில் எழுந்து வருமென
மீள குடியமர்த்தபடா
விடுதலைக்கு உயிர் அளித்த உத்தமிகள்
மேற்கு நோக்கிய பார்வை
எதிர்நோக்கி நீளும் கைகள்
காண மறுத்து
குனிந்த எங்கள் தலைகள்
தன்மக்களை காக்கவே
மையத்துக்கு கடிதம் வரைந்து
கொண்டிருக்கும்
கடலில் கரைத்த சாம்பல்கள்
முள்வேலி விடும் மூச்சு காற்றுகள்
இக்கரை தொடும் நாளில்
அக்கறை உள்ள ஒராயிரம் பிணங்கள்
வீறு கொண்டு எழும்
நம்பிக்கை தான் விடுதலை தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக