28.08.2010 அன்று ஜெனிவா முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய நடைப்பயணம்; இன்று 27.09.2010 பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் எழுவாய் தமிழா நெருப்பாய் என்ற எழுச்சி நிகழ்வு தமிழ் மக்களின் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
தியாகி திலீபனின் திருவுருப்படத்திற்கு ஈகைச்சுடரேற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில், ஜேர்மன் நாட்டைச்சேர்ந்த கத்தோலிக்க மதகுரு தமது ஆரம்ப உரையில் தமிழ்மக்களின் நியாயமான விடுதலைப்போராட்டத்தை ஆதரித்துப்பேசியதோடு, என்றாவது ஓருநாள் தமிழ்மக்கள் தமிழ்ழீழத்தில் சுதந்திரத்துடன் வாழ்வார்கள் என்பதையும் வலியுறித்திக் கூறினார்.
தியாகி திலீபனின் ஈகைப் பயணத்தின் 23ம் ஆண்டின் இறுதி நாளான நேற்றைய தினம் மனிதநேய நடைப்பயணத்தை மேற்கொண்டு பெல்ஜியத்தை வந்தடைந்த ஜெகன், தேவகி, வினோத் ஆகிய மூவரும்;. இன்று பிற்பகல் 01.30 மணியிலிருந்து 03.00 மணிவரை ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஐதந்திரிகளைச் சந்தித்தனர்.
பின்பு நடை பயணமாக தமிழீழத் தேசியக் கொடிகளைத் தாங்கிய வண்ணம் தமிழீழத் தேசப்பற்றாளர்களால் நிகழ்வுத் திடலுக்கு அழைத்துவரும் வேளையில், திடலில் இருமரங்கிலும் தமிழ் மக்கள் கரகோச எழுச்சியுடன் அவர்களை வரவேற்றனர்.
தியாகி திலீபனின் திருவுருவப்படத்திற்க்கு வணக்கத்தை செலுத்திய பின், இராஐதந்திரிகளைச் சந்தித்த விபரங்களை தமது உணர்வுகள் மூலமாக மக்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளின் ஈழத்தமிழரவையின் பிரதிநிதிகள் தங்களை அறிமுகம் செய்ததோடு, தத்தமது நாடுகளில் ஈழத்தமிழரவையின் செயற்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல இருப்பதாகவும் தெரிவித்ததை யடுத்து சுவிஸ் ஈழத்தமிழரவையால் தாயக அவலங்களைத்தாங்கிய முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டது.
தமிழகத்தில் இருந்து வந்திருந்த நடராஜன் அவர்களின் சிறப்புப்பேச்சுடன், மனிதநேயன் சிவந்தன் தொடக்கிய பயணம் பெரியோர்களால் தொடரப்பட்டு மீண்டும் இளையோரின் கைகளில் புறுசெல்நகரில் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் யேர்மன் பாராளுமன்றம் நோக்கி தொடர உள்ளனர்........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக