வியாழன், 30 செப்டம்பர், 2010

நாடு கடந்த அரசாங்கம் நியூ யோர்க் நகரில் கூடுகின்றது.

நாடு கடந்த அரசாங்கம் அரசியல் அமைப்புச் சபையாக இன்று நியூ யோர்க் நகரில் கூடுகின்றது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த அமர்வு ஐ. நாடுகள் சபையின் தலைமையகத்துக்கு எதிரில் அமைந்துள்ள மிலேனியம் யு என் பிளாசா எனப்படும் மாநாட்டு அரங்கில் நடைபெறுகின்றது.
இவ் அமர்வின் முதல் நாளின் போது முக்கிய விருந்தினர்களின் உரைகளைத் தொடர்ந்து நாடு கடந்த அரசாhங்கத்தின் அரசியலமைப்பு வரைவு விவாதத்திற்;கு எடுத்துக் கொள்ளப்படும்.

இம் முதல் நோக்கத்துக்கு அப்பால் அரசியலமைப்பு அவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து நாடு கடந்த அரசாசாங்கத்தின் கட்டமைப்பு இடைக்கால நிலையில் இருந்து நிரந்தரமான நிலைக்கு ஒழுங்கமைக்கப்படுவதே இவ் அமர்வின் இரண்டாவது முக்கிய நோக்கமாக அமைகிறது.

இவ் அமர்வின் போது நாடு கடந்த அரசாசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை எவ்வாறு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ அரசினை நிறுவுவதற்;கு வழிகோலும் என்பதும் இன்றைய நிலையில் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனர்வாழ்வு அபிவிருத்தி வேலைகளை கொள்கையளவிலும் நடைமுறையிலும் எவ்வாறு மேற்கொள்வது என்பதும் இவ் அமர்வின் போது ஆராயப்படும்.

நாடு கடந்த அரசாசாங்கமும் வாசிங்ரனில் அமைந்துள்ள அமெரிக்கன் பல்கலைக்கழத்தின் சட்டவியல் மனித உரிமைகள் செயற்பாட்டுக்குழுவினருடன் இணைந்து எம் இனத்திற்கான நீதி தேடும் முயற்;சி;க்கு சட்டவியல் முறைகள் பெற்றுத் தரக் கூடிய வாய்ப்புக்களை ஆராய்ந்து வருகிறது என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைத்துலக மனித உரிமை விதிகள் மீறப்பட்டதால் பாதிப்படைந்த மக்களுக்கு நீதி பெற்றுத் தருவதில் இவ் அமைப்புகள் சிறப்பான அனுபவம் பெற்றவை.

ஈழத்தமிழர்கள் பெருமளவில் வாழும் 15 முக்கிய நாடுகளில் இருந்து 112 பிரதிநிதிகளை நாடு கடந்த அரசாங்கத்தின் அரசியல் சபைக்கு தெரிவு செய்யும் முயற்;சி சென்ற ஆண்டின் இறுதிப்பகுதியில் ஆரம்பித்தது எல்லோரும் அறிந்த விடையம். ஒரு சில நாடுகளில் இத் தேர்தல் முயற்;சிகள் முற்றுப்பெறாத நிலையில் அவ்வகையான 8 நாடுகளின் நிலை பற்றி இங்கு அறியத்தருகிறோம்.

அவுஸ்திரேலியா: அவுஸ்திரேலியாவில் இருந்து தெரிவு செய்யப்படவிருந்த 10 பிரதிநிகளில் 6 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நியு சவுத் வேல்சில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 4 பிரதிநிகளின் தெரிவு பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இவை பற்றி விசாரிப்பதற்;கு டாக்டர் போல் டொமினிக் அவர்களை தலைவராகக் கொண்டு டாக்டர் கௌரிபாலன், திரு பத்மநாதன் ஆகியோரையும் உள்ளடக்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

செப்ரெம்பர் 10ம் திகதி விசாரணையை முடித்து அறிக்கையைத் தருமாறு கேட்டிருந்த போதும் இவ் விசாரணைக்குழு இயல்பான நியாயம் எல்லோருக்கும் வழங்கப்படவேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் கால அவகாசம் கேட்டிருந்ததால் முடிவுத் திகதி செப்ரெம்பர் 23ம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது. நேற்றைய தகவலின்படி விசாரணை முடிவுற்றுள்ளது. தமது தீர்மானத்தை உறுதி செய்யும்நிலையில் தாம் இருப்பதாகக் குழுவினர் தெரிவித்துள்ளனர்;.

யேர்மனி யேர்மனியில் இருந்து தெரிவு செய்யப்பட இருந்த 10 பிரதிநிகளில் 6 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தெரிவு செய்யப்பட்ட மற்றைய நால்வரின் தேர்தல் பற்றி எழுந்த கேள்விகளின் அடிப்படையில் மீள் வாக்கெடுப்பு நடத்துவது என தீர்மானிக்கப் பட்டது.

குறிப்பிட்ட பிராந்தியத்தில் இருந்த வேட்பாளர்கள் சிலர் தேர்தலில் இருந்து விலகி விட்டதாகக் கிடைத்த செய்தியைத் தொடர்ந்து மற்றைய நான்கு வேட்பாளர்களும் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்திருந்தோம். இதன் பின்னர் இரு வேட்பாளர்கள்; தாம் தேர்தலில் இருந்து விலகவில்லை என தேர்தல் ஆணையகத்திற்;கும் செயலகத்திற்;கும் அறிவித்துள்ளனர்.

இவ் விடையம் தற்போது கருத்தில் எடுக்கப்பட்டுள்ளது. எனினும் தேர்தல் ஆணையகத்தினால் ஏற்கனவே விடுக்கப்பட்ட அறிவி;த்தலை ஏற்றுக்கொள்வதோடு அதே வேளையில் நியாயத் தன்மையைப் பேணுவதன் அவசியம் கருதி இவ் விடயத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இனி; நிறுவப்போகின்ற புதிய தேர்தல் ஆணையகத்திடம் கையளிப்பது என முடிவு செய்யப் பட்டுள்ளது.

பிரான்ஸ:; பிரான்ஸில் இருந்து தெரிவு செய்யப்படவிருந்த 10 பிரதிநிகளில் 7 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தெரிவு செய்யப்பட்ட நால்வரின் தேர்தல் முறைகள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன.

பிரான்ஸின் 93ம் 94ம் மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தல்களின் போது முறைகேடுகள் நடை பெற்றதனால் அத் தேர்தல்கள் செல்லுபடியாகாதென தேர்தல் ஆணையகம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து விசாரணைக் குழு ஒன்று நிறுவப்பட்டது. இக்குழுவில் அங்கம் வகிப்போர் ஈடுபட்ட எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவர்கள்தான் என்பதும் அவதானத்துடன் நிறுவப்பட்டது. அதன் படி திரு தோமஸ் நுவலாந்தெ (சட்ட வல்லுனரும் பிரான்ஸின் அரசியல் கட்;சியின் தேசிய மதியுரைக் குழு உறுப்பினரும்) திரு மிக்கேல் பராஸ் (பிரன்ச் சமூக அமைப்புத் தலைவர்) திருமத லோறா புஜீ (பிரன்ச் பெண்மணி) திரு மைக்கல் லோறன்ற் (பாரிசின் 18 மாவட்ட பள்ளிகளின் பிரதிநிதி) செல்வி மலிக்கா அகலி (வரலாற்றாளார்) ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

விசாரணைக்குரிய தேர்தல் போட்டியாளர்கள் விசாரணைக்குழு தமக்கு அனுப்பிய அழைப்பு கிடைக்கவில்லை எனச் சொல்லி விசாரணையில் பங்கு பற்றவில்லை. ஆனாலும் விசாரணைக்கு வரும்படி இரு முறை அழைப்பு அனுப்பியதாக விசாரணைக்குழு கூறியுள்ளது.

இக் குழு பிரான்ஸ் மொழியில் வெளியிட்ட 30 பக்கங்கள் கொண்ட அறிக்கை தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு மதியுரைக்குழுவிற்;கும் அனுப்பப்பட்டது. விசாரணைக்குழு தேர்தலின் போது பாரிய முறைகேடுகள் நடை பெற்றதாகவும் போட்டியிட்டவர்களில் ஒருவர் பிரான்ஸ் சட்டத்துக்கு அமைய தேர்தல் எதிலும் போட்டியிட தகுதியற்றவர் எனவும் முடிவு செய்துள்ளது.

தனிப்பட்டவர்களின் விபரங்களை இவ் அறிக்கை கொண்டிருந்த படியால் இவ்வறிக்கையை வெளியிடுவதில்லை என தீர்மானிக்கப்பட்டது. ஈடுபாடு உள்ள எல்லோரும் விசாரணையில் பங்கு பற்றவில்லை என்பதாலும் விசாரணைக்குழுவினால் அடையாளம் காணப்பட்ட விடயங்கள் அரசியல் அமைப்பு வரைவில் ஏற்;கப்பட்டுள்ளதாலும் இவ் விடயத்தினை வரப்போகும் புதிய தேர்தல் ஆணையகத்திடம் கையளிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து: நெதர்லாந்து அரசாங்கத்தின் சட்ட நடவடிக்கைகள் காரணமாக தற்போதுள்ள நிலையில் அங்கு தேர்தல் நடாத்துவது சாத்தியம் இல்லையென அங்குள்ளவர்களால் கருதப்படுகிறது.

இத்தாலி: இத்தாலியில் தெரிவு செய்யப்பட வேண்டிய மூன்று பிரதிநிகளுக்கான விண்ணப்பங்கள் சென்ற வாரம் கோரப்பட்டு 3 பிரதிநிதிகளும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

அயர்லாந்து: அயர்லாந்து நாட்டுக்கான ஒரு பிரதிநிதி போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பின்லாந்து: இந் நாட்டின் ஒரு பிரதிநிதிக்கான தேர்தல் முயற்;சிகள் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்க உள்ளன.

இவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிகளின் மொத்த எண்ணிக்கை 98 ஆகவும் மேலும் 14 பேருக்கான தேர்தல்கள் நடைபெறாமலோ அல்லது தீர்;வுகாணப்படாத கேள்விகளின் காரணமாக முடிவுகள் பின் போடப்பட்டும் உள்ள நிலை தெளிவாகிறது.

தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளில் பெரும்பாலானோர் நிய+ யோர்க் நகர அமர்விலும் ஐரோப்பாவைச் சேர்ந்த பிரதிநிதிகளில் சிறுதொகையானோர் பாரிஸ் நகரத்திலும் இலண்டன் நகரத்திலும் வேறு ஒரு சில இடங்களில் இருந்தும் காணொளி ஊடாக நியு யோர்க் நகரில் உள்ளவர்களோடு கலந்து கொள்கிறார்கள்.

எமது அரசவையின் இந்த அமர்வின் போது ஆக்க பூர்வமான உரையாடல்கள் மூலம் நாடு கடந்த அரசாங்கம் தன்னுடைய இலக்குகளைச் சென்று அடைவதற்;கான வேலையின் அடுத்த அதிமுக்கிய கட்டத்துக்கு வழிகோலும் என்பது எம்முடைய பெரும் எதிர்பாப்பாக உள்ளது.


திரு. விசுவநாதன் ருத்திரகுமாரன்

இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக