சனி, 11 செப்டம்பர், 2010

முன்னாள் ஊடக அமைச்சர் சேகு இஸ்ஸடீனின் வீட்டின் மீதே துப்பாக்கிசூடு.


அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பகுதியில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் இணைப்பாளரின் வீட்டின்மீது இன்று சனிக்கிழமை அதிகாலை துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை அதிகாலை 3.00மணியளவில் அக்கரைப்பற்று,மத்திய கல்லூரியில் உள்ள முன்னாள் ஊடக அமைச்சர் சேகு இஸ்ஸடீனின் இணைப்பாளர் ஐ.எம்.இப்ராஹிம் என்பவரின் வீட்டின் மீதே துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கி சூடு காரணமாக எவருக்கும் காயங்கள் இல்லையென தெரிவித்த பொலிஸார் வீட்டின் மதிலுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதேவேளை இவரின் மகன் பாலியல் பலத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டது தொடர்பான  வழக்கு ஒன்றில் பொலிஸ் அதிகாரியின் சகோதரன் ஒருவருக்கு கடந்த மாதம் கல்முனை மாவட்ட நீதிமன்றத்தினால் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் அக்கரைப்பற்று முஸ்லிம் பகுதிகளில் சட்டவிரோத ஆயுதங்கும் ஆயுதக்குழுக்களும் அதிகரித்துவருவதாகவும் இதன் காரணமாக கொள்ளைச்சம்பங்களும் கப்பம் பெறும் சம்பவங்களும் அதிகரித்துவருவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக