தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே!
தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே!தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே!
வெடிவிழுந்து எரிந்த பனை
கரை உடைந்து காயந்த குடம்
கூரை சரிந்த எமது இல்லம்
குருதி வடிந்த சிறு முற்றம்
இரவை கிழித்த பெண்ணின் கதறல்
ரத்தம் வடிந்த குழந்தை பொம்மை
என் தேசம் பதுங்கு குழியின் உள்ளே
புதைய சம்மதமா?
தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே!
விளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ!
ஊஞ்சலாடிய முயலை
நீந்திப்பழகிய வாவி எல்லை
என் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ
என் தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ
முற்றம் தெளித்திட விடியல் வருமோ!
யுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ!
தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக