செவ்வாய், 7 செப்டம்பர், 2010

நெடுங்கேணி பகுதியில் தவறுதலாக துப்பாக்கி வெடித்து இராணுவ வீரர் பலி

காவல் கடமையில் இருந்த வேளையில் இராணுவ வீரரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததன் காரணமாக துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி அவ்வீரர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நெடுங்கேணி பிரதேசத்தில்  இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில்  நடைபெற்றுள்ளது.

விசாரணைக்காக  சடலம் வவுனியா அரசினர் பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. லான்ஸ் கோப்ரல் தரத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரே இறந்தவர் ஆவார்.

இச்சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக