செவ்வாய், 7 செப்டம்பர், 2010

களுவாஞ்சிகுடி விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபில் காயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று பிற்பகல் 12.30மணியளவில் மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதியில களுவாஞ்சிகுடி, இலங்கை வங்கிக்கு முன்பாக இடம்பெற்ற இந்த விபத்தில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் எல்குலசிறி(42வயது)என்பவரே படுகாயமடைந்ததாக களுவாஞ்சிடி பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இவர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் இருந்து களுதாவளைக்கு சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர் களுவாஞ்;சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக