வியாழன், 21 அக்டோபர், 2010

இந்திய அமைதிப்படையினரால் யாழ்-வைத்தியசாலையில் நடாத்தப்பட்ட படுகொலையின் 23-ம் ஆண்டு நினைவு இன்று.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 1987 ஆண்டு ஒக்ரோபர் 21 ஆம், 22 ஆம் திகதிகளில் இந்திய அமைதிப்படையினரால் நடாத்தப்பட்ட படுகொலையின் 23-ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 1987 ஆண்டு ஒக்ரோபர் 21 ஆம், 22 ஆம் திகதிகளில் இந்திய அமைதிப்படையினரால் கொல்லப்பட்ட 21 பணியார்களின் 23 ஆம் ஆண்டு நினைவு தினம் நாளை வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

கடமை நேரத்தில் பலியான இந்த 21 பணியாளர்களினதும் நினைவாக வைத்தியசாலையில் உள்ள அவர்களுடைய உருவப் படங்களுக்கு சுடர் ஏற்றி மலரஞ்சலி செய்யும் நிகழ்வு இடம்பெறும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

கொல்லப்பட்ட பணியாளர்களின் உறவினர்கள், வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலைப் பணியாளர்கள் எனப் பலர் இந்த நினைவு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தப் படுகொலைச் சம்பவத்தில் யாழ். போதனா வைத்திய சாலையில் பணிபுரிந்த வைத்திய அதிகாரிகளான அ.சிவபாதசுந்தரம், கே.பரிமேலழகர், கே.கணேசரத்தினம் ஆகியோர் உட்பட 21 பணியாளர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக