கொழும்பு கடற்கரை வீதியில் நகைக்கடை வைத்துள்ள தமிழ் வர்த்தகர் ஒருவர் நேற்று புதன்கிழமை இரவு 7.15 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டார். கொட்டாஞ்சேனையிலுள்ள கிரீன் வீதியில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட இவரையும் இவரது மகனையும் விடுவிக்க வேண்டுமாயின் தமக்கு 50 மில்லியன் ரூபா கப்பம் தரவேண்டும் என்று கடத்தல்காரர்கள் குறித்த வர்த்தகரின் குடும்பத்திடம் பேரம் பேசியிருந்தனர்.
ரவி ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடையின் உரிமையாளரான ஆர். மகேந்திரன் என்பவரே கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர் ஆவார். மகேந்திரனின் ஜீப்பை வழிமறித்த கடத்தல்காரர்கள் துப்பாக்கி முனையில் இக்கடத்தலை மேற்கொண்டனர்.
எனினும் சில மணித்தியாலங்களின் பின்னர் மகேந்திரனின் மகனை விடுவித்த கடத்தல்காரர்கள், மகேந்திரனை விடுவிக்க 50 மில்லியன் ரூபா கப்பம் கேட்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் கேட்ட 50 மில்லியன் ரூபாவைச் செலுத்திய பின்னர், நேற்று நள்ளிரவில் இவர் விடுவிக்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக