இந்தியாவின் புதுடெல்லி நகரில் நடைபெறும் 19வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் நிறைவுநாள் விழாவின் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே கலந்துகொள்வதாக அரச மற்றும் தனியார் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது எனவும், பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர் என்ற வகையிலேயே ஜனாதிபதி இதில் கலந்துகொள்வதாகவும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி இந்த வைபவத்தில் கௌரவ விருந்தினராக கலந்துகொள்கிறார் என அரசாங்கத்தின் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் பொதுநலவாய நடவடிக்கைகளில் அவ்வாறான வரவேற்பு பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினர்களுக்கு மாத்திரமே கிடைப்பதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வில் அந்த அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் பல தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் நிறைவுநாள் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வதாக வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட
அறிக்கைக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதனை இரத்துச் செய்ய நேர்ந்ததாகவும், இது ராஜதந்திர ரீதியில் இலங்கையின் பெயருக்கு பாதிப்பாக அமைந்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் அந்த சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்
அதேவேளை, அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்த அரச தலைவரான இலங்கை ஜனாதிபதியை இந்த விழாவிற்கு அழைக்க வேண்டாம் என பொதுநலவாய நாடுகளின் பல மனித உரிமை அமைப்புகள் ஏற்பாட்டுக் குழுவிற்கு அழுத்தம் கொடுத்திருப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக