வெள்ளி, 1 அக்டோபர், 2010

அம்பாறை பொலிஸாரால் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு.

அம்பாறை நகரசபை மைதானத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை அம்பாறை பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை ரஜவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான எஸ்.அனுர பெரேராவின் சடலமே இது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நான்கு பிள்ளைகளின் தந்தையான் இவர், அம்பாறை நீர் வழங்கல் வடிகாலமைப்பு பிராந்திய அலுவலகத்தின் உத்தியோகத்தர் ஆவார்.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக