வெள்ளி, 1 அக்டோபர், 2010

வன்னியிலிருந்து இடம் பெயர்ந்த குடும்பங்களுக்கு ஹரிட்டாஸ் எகெட் உதவி.

வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து திருக்கோயில் பிரதேச செயலகப் பிரிவில் விநாயகபுரம்,காயத்திரி கிராமம் ஆகிய இடங்களில் மீள்குடியேறியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப ஹரிட்டாஸ் எகெட் நிறுவனம் சுமார் 5 லட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகளை இன்று காலை வழங்கியுள்ளது.


12 குடும்பங்களுக்கு 40 ஆயிரம் ரூபா பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரங்களையும், 2 குடும்பங்களுக்கு 25 ஆயிரம் பெறுமதியான தையல் இயந்திரங்களையும் அவர்கள் வழங்கியுள்ளனர்.

திருக்கோயில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தின் போது, ஹரிட்டாஸ் எகெட் பணிப்பாளர் அருட்பேராசிரியர் ஸ்ரீதரன் சில்வெஸ்டர் மேற்படி பொருட்களைக் கையளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக