கடந்த ஒருவருட காலமாக இந்தோனேசிய தடுப்பு முகாமில் மிகுந்த துன்பத்துடன் கண்ணீரும் கவலையுமுடன் ஈழத்தமிழ் அகதிகள் 254பேர் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களது வாழ்வும் இவர்களது பிள்ளைகளின் எதிர்காலமும் இன்று கேள்விக்குறியாகியுள்ளது.
அவுஸ்த்திரேலியா நோக்கிய பயணத்தின்போது கடந்த அக்டோபர் 11ம் திகதி இந்தோனேசிய கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இந்தோனேசியாவின் மெராக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டனர். இதன் பின்னர் கடந்த ஏப்ரலில் இவர்கள் ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையத்தின் உறுதிமொழியை அடுத்து தஞ்சோங் பினாக் என்ற இடத்தில் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இவர்கள் விடயத்தில் இந்தேனேசிய அரசம் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையமும் வழங்கிய உறுதி மொழிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. இங்குள்ள அகதி மக்கள் தமது எதிர்காலம் குறித்து எதுவும் தெரியாத நிலையில் நடைப்பிணங்களாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக