இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் கூடுகிறது.
இதற்கான அழைப்பாணையை கட்சியின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராஜா சகல மத்தியகுழு உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலமை குறித்தும் எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்கள், கட்சியின் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.
கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் சட்ட நடவடிக்கை குறித்தும் இக்கூட்டத்தில் ஆராயப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக