திங்கள், 11 அக்டோபர், 2010

கரடியனாறு சம்பவத்தைப் போன்று வாழைச்சேனை காவல்துறை நிலையத்திலும் ஏற்படும் அபாயம்?

மட்டக்களப்பு கரடியனாறு காவற்துறை நிலைய வளாகத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் போன்ற சம்பவமொன்று வாழைச்சேனை காவற்துறை நிலையத்திலும் இடம்பெறக் கூடும் என பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக காவற்துறை தலைமையகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.வாழைச்சேனை காவற்துறை நிலையத்திலும் பாதுகாப்பற்ற முறையில், வெடிப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தத் தகவல்கள் வெளியானதை தொடர்ந்தும் காவற்துறை நிலையத்தில் உள்ள வெடிமருந்துகளை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு கோரி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் ஆலோசனைகளை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக காவற்துறை உயர் அதிகாரியொருவர் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்

எனினும் வாழைச்சேனை காவற்துறை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள வெடி மருந்துகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக