செவ்வாய், 19 அக்டோபர், 2010

ஊரைக் கொளுத்துகிற ராஜாவுக்கு கொள்ளிக்கட்டையை கொடுக்கிற மந்திரிதான் கருணா! சிவாஜிலிங்கம்.

ஊரைக் கொளுத்துகிற ராஜாவுக்கு கொள்ளிக்கட்டையை எடுத்துக் கொடுக்கிற மந்திரியைப் போலதான் மீள்குடியேற்றத்துறைப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அரசில் செயற்படுகின்றார் என்று குற்றஞ்சாட்டி உள்ளார் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் கே.சிவாஜிலிங்கம்.


யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற என்று வந்திருக்கும் சிங்களக் குடும்பங்கள் 180 ஐ அரச காணிகளில் குடியேற்றுகின்றமைக்கு மீள்குடியேற்றத்துறை அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ தீர்மானித்துள்ளார்.

 இக்குடும்பங்கள் சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றப்படும் வரை அரச காணிகளில் வசிக்க முடியும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அவர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:-

 ”அரசின் ஒட்டுமொத்த சிங்கள குடியேற்ற நிகழ்ச்சி நிரலின் கீழான ஒரு நடவடிக்கையாகவே இதனைக் காண முடிகின்றது. இவற்றுக்கு எல்லாம் கருணா துணை போகின்றார்.

 யாழ்ப்பாணத்தில் சிங்களவர்கள் வாடகைக்கு குடியிருந்திருக்கின்றார்கள். வாடகைக்கு குடியிருந்தவர்களுக்கு என்ன மீள்குடியேற்றம்? சொந்தக் காணிகள், வீடுகள் இருந்தால் உறுதிகள் மூலம் நிரூபித்து விட்டு அவர்கள் மீள்குடியேறலாம்.

 காலம் காலமாக, பாரம்பரியம் பாரம்பரியமாக யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற சில தமிழர்களுக்கு சின்ன அளவில் கூட சொந்தக் காணிகள் இல்லை. யாழ்ப்பாணத்தில் அரச நிலங்கள் மிக சொற்பமானவை.

 இவ்வாறெல்லாம் இருக்க இச்சிங்களக் குடும்பங்களை அரச காணிகளில் குடியேற்றுகின்றமையை ஏற்க முடியாது. நாம் இதை வன்மையாக கண்டிக்கின்றோம். அரசு இத்திட்டத்தைக் கை விட்டு விட வேண்டும்.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக