வியாழன், 4 நவம்பர், 2010

ஜே.வி.பினால் மீண்டும் ஆயுதப்போராட்டத்திற்கான அறிகுறிகள்.

ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னனியின் நடவடிக்கைகளில் ஒரு ஆயுதப்போராட்டத்திற்கான அறிகுறிகள் தென்படுவதால், அதன் மாணவர் அமைப்பான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான அமைப்பை உடனடியாக அரசு தடை செய்ய வேண்டும் என சிறீலங்கா அரசின் அமைச்சரும், முன்னாள் ஜே.வி.பி உறுப்பினருமான விமல் வீரவன்சா தெரிவித்துள்ளார்.

மகிந்தாவின் சீனப் பயணம் தொடர்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பியின் மாணவர் அமைப்பு பல்கலைக்கழக மாணவர்களிடம் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தி வருகின்றது. நாம் ஜே.வி.பியினதும், மாணவர் அமைப்பினதும் நடவடிக்கைகளை கூர்ந்து அவதானித்து வருகின்றோம். அது தொடர்பான அறிக்கையும் பாதுகாப்பு அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விமலின் கருத்து குறித்து கருத்து எதனையும் தெரிவிக்க மறுத்த மகிந்தா, இது தொடர்பான தகவல்களை கோத்தபாயாவிடம் தெரிவிக்குமாறு விமலிடம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக