கிளிநொச்சி பூநகரி இரணைதீவு கடற்பரப்பிற்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் வன்முறையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. கடந்தவாரம் இரணைதீவுக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இடைமறித்த கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதன் பின்னர் மீனவர்கள் பிடித்திருந்த 500 கிலோ மீன்களைப் பறித்துச் சென்றதுடன், மீனவர்களை பச்சை மீன்களை உண்ணுமாறும் நிர்பந்தித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மீன்பிடித்துறை அதிகாரிகளால் இலங்கைக் கடற்படையின் உயர்மட்டத்திற்கு தகவல்கள் வழங்கப்பட்டதன் பின்னர் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ள மீனவர்கள் அச்சம் காரணமாக தற்போது மீன்பிடித்தலுக்கு செல்வதில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பூநகரி இரணை தீவுப் பகுதியில் தங்கியிருந்து மீன்பிடித்தலில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மீன்பிடித் தொழிலை மட்டும் நம்பி வாழ்கின்ற மக்கள் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலையினால் பலத்த நெருக்கடிகளை எதிர்கொண்டுவருவதாக அந்த மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக