பராக் ஒபாமாவின் மூன்று நாள் இந்திய பயணம் அமெரிக்கா எதிர்பார்த்த அனைத்தையும் சாதித்துவிட்டது என்று அந்நாட்டு அயலுறவு பேச்சாளர் கூறியுள்ளார்.
வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் பி.ஜே.கிராவ்லி, “இந்த பயணத்தில் என்னவெல்லாம் எதிர்பார்த்தோமோ அவை அனைத்தும் சாதிக்கப்பட்டுவிட்டதாகவே கருதுகிறோம்” என்று கூறியுள்ளார்.
“ஒபாமாவின் இந்த பயணம், இரு நாடுகளுக்கிடையிலான உறவின் முக்கியத்துவத்தையும், உலகில் இந்தியா ஆற்ற வேண்டிய பங்கையும் உணர்த்தியுள்ளது” என்றும் கிராவ்லி கூறியுள்ளார்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக