செவ்வாய், 9 நவம்பர், 2010

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் வழங்குவது குறித்து இலங்கையுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை:-ஐரோப்பிய ஒன்றியம்.

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் வழங்குவது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் எவ்வித பேச்சுவார்த்தையும் ஆரம்பிக்கவில்லை என ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பெர்னாட் சவேஜ் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் இடைநிறுத்தப்பட்டது.

சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கான எந்தவொரு முனைப்பையும் இலங்கை எடுக்கவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக