பூநகரி வாடியடிப்பகுதியில், தமக்குக் காணியிருப்பதாக விண்ணப்பம் செய்தவர்களிடம் காணிக்குரிய உறுதியின் பிரதி, காணியின் நில அளவைப் படப்பிரதி ஆகியவற்றை பூநகரி பிரதேச சபை கோரியுள்ளது.குறிப்பிட்ட காலத்துக்குள் சம்பந்தப்பட்டவர்கள், ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறின் பூநகரி பிரதேச சபைக்குரிய காணியாக அவை பிரகடனப்படுத்தப்படுமெனவும் சபையின் செயலாளர் அறிவித்துள்ளார்.
இப்பிரதேசத்துக்கு வெளியில் இருப்பவர்கள் 0243243493 அல்லது 0243248250 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாக தகவல்களை தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காணிகளில் அடையாளப்படுத்தப்பட்ட காணியில் பிரதேச சபைக்கான கட்டிடம் அமைக்கப்பட்டு வருகின்றது.இப்போது தெரிவு செய்யப்பட்ட காணிகளில் பஸ் நிலையம், சந்தைகள், கடைத்தொகுதி அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதால், காணி உரிமையாளர் எவரும் இருப்பின் தெரிவு செய்யப்பட்டுள்ள இடங்களை மாற்ற முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடியடி சந்தியில் இருந்து கிழக்கு பக்கமாக நாகதேவன் துறைக்குச் செல்லும் வீதியும் தெற்குப் பகுதி கிளிநொச்சிக்குச் செல்லும் பாதையும், அமைந்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்பாலான குடியிருப்பாளர்கள் அனுமதியின்றி அரச காணிகளில் குடியேறி பல வருடங்கள் கடந்துவிட்டதால் அவற்றுக்கு தாமே உரிமையாளர் என தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக