மக்கள் விடுதலை முன்னணியினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்றும் கையெழுத்திடும் நிகழ்வொன்றும் நடைபெற்றது. ‘நாம் இலங்கையர்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி, ரில்வின் சில்வா உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், காணாமற்போனோரின் உறவினர்களும் கலந்து கொண்டு தங்கள் பிளளைகளையும் உறவினர்களையும் மீட்டுத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
காணாமற்போனோரின் உறவினர்கள் காணாமற்போனோரின் புகைப்படங்களையும் அடையாளச் சான்றுகளையும் ஏந்தியவாறு “எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தாரு்கள்”, “ஆண்டுக்கணக்காக காணாமற்போயிருக்கும் எங்கள் உறவினர்களை எங்களிடம் மீண்டும ஒப்படைக்க வழி செய்யுங்கள்”, “எங்களுக்கான பதிலை அரசாங்கம் சொல்ல வேண்டும்” என்ற கோரிக்கைகளைக் கதறி அழுதவண்ணம் விடுத்தனர்.
“நாம் இலங்கையர்” எங்கள் சொந்தங்களை மீட்டுத்தாருங்கள் என்ற நீண்ட பதாகையில் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச உட்பட ஜேவிபியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் பலரும் கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக