ஞாயிறு, 14 நவம்பர், 2010

பத்மினி சிதம்பரநாதன் வீட்டில் வைத்து ஜேவிபி உறுப்பினர், ஊடகவியலாளர் மீது தாக்குதல்

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் ஊடகவியலாளர் பிரியந்த லியனகே உள்ளிட்ட குழுவினர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், பழைய வீதி, கந்தர்மடத்திலுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதனின் இல்லத்தில் வைத்தே இன்று மாலை இவர்கள் தாக்கப்பட்டதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

“நாங்கள் இலங்கையர்கள்” என்ற அமைப்பினர் காணாமற்போனோர் தொடர்பில் தகவல்களை திரட்டி அதுதொடர்பில் நடாத்தவிருந்த செயலமர்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காகவே இக்குழுவினர் யாழ்ப்பாணம் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக