வீடுகளுக்குச் சென்று பார்வை யிடவும் ஆலயங்களுக்குச் சென்று வழிபடவும் அனுமதித்த இராணுவம் அங்கு மீள்குடியமர்வதற்கு மட்டும் கண்ணிவெடி உள்ளதாக கூறுவதற்கு காரணம் என்ன? என வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி மக்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கேள்வியயழுப்பினார்கள்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லி ணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்றுக் காலை வடமராட்சி கிழக்கு குடத்தனை யில் நடைபெற்றது.இதன்போது ஆணைக்குழுவின் உறுப்பி னர்கள் சாட்சியமளிக்க வந்த மக்களிடம் பிரச் சினைகளை கேட்டறிந்தனர். இதில் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக் கேணியைச் சேர்ந்த மக்கள் தற்போது இடைத் தங்கல் முகாமில் உள்ள தமது பிரச்சினைகளை எடுத்துக்கூறினர்.
இதில் விடுதலைப்புலிகளிடமிருந்து இரா ணுவத்தினர் வெற்றிலைக்கேணியை மீட் டெடுக்கும்வரை நாங்கள் எமது வீடுகளில் தங்கியிருந்தோம்.எனவே அப்பகுதியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன என்பது ஏற்றுக்கொள் ளமுடியாது. அத்துடன் அண்மையில் எமது வீடுகளைச் சென்று பார்வையிடவும் ஆலயங் களுக்குச் சென்று வழிபடவும் இராணுவத் தினர் அனுமதி வழங்கினர். எனவே கண்ணிவெடிகள் இருந்தால் இரா ணுவத்தினர் அனுமதி வழங்குவார்களா? என ஆணைக் குழு உறுப்பினர்களிடம் மக்கள் கேள் வியயழுப்பினர். இதற்குப்பதிலளித்த ஆணைக் குழு உறுப்பினர்கள், இது தொடர்பில் யாழ். அரச அதிபரிடம் கலந்துரையாடி விரைவில் தீர்க்கமான முடிபை பெற்றுத்தருவோம் என்றனர். அத்துடன் இவ்விசாரணையின் போது சாட்சியமளித்த திருமதி கமலேஸ்வரி, எனது கணவர் தவக்குமார் பத்மநாதன் விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். அவரின் இயக்கப் பெயர் விமல் மாஸ்ட்டர்.
எனது கணவர் விடுதலைப்புலிகள் அமைப் பில் இணைந்தபோது யுத்த காலத்தில் கால் ஒன்றையிழந்தார். அதன் பின் களப்பயிற்சி வழங்குபவராக அந்த அமைப்பில் இருந் தார். வன்னி இறுதி யுத்தம் முடிபடைந்த நிலை யில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி வட்டுவாகலில் வைத்து இராணுவத் தினரிடம் சரணடைந்தார். எனினும் அதன் பின் அவர் தொடர்பில் எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை. எனவே எனது கணவரை மீட்டுத்தாருங்கள் என தனது குழந்தையுடன் கண்ணீர் மல்க சாட்சியமளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக