திங்கள், 29 நவம்பர், 2010

விக்கிலீக்ஸ் இணையம் இலங்கை தொடர்பான தகவல்களையும் வெளியிடத் திட்டம்

விக்கிலீக்ஸ் இணையத் தளம் இலங்கை தொடர்பான தகவல்களையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான பெருந்தொகை ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையத் தளம் அண்மையில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடர்பான மூவாயிரம் ஆவணங்கள் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
அமெரிக்க ராஜதந்திர விவகாரம் தொடர்பான 250,000 தகவல்களில் இலங்கை தொடர்பான தகவல்களும் அடங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது.

சீனா தொடர்பான 8320 ஆவணங்களும், ஆப்கானிஸ்தான் தொடர்பான 7095 ஆவணங்களும், இந்தியா தொடர்பான 5087 ஆவணங்களும், பாகிஸ்தான் தொடர்பான 4775 ஆவணங்களும், இலங்கை தொடர்பான 3166  ஆவணங்களும், பங்களாதேஷ் தொடர்பான 2182 ஆவணங்களும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க தூதுவராயலங்களிலிருந்து இந்தத் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

இந்தத் தகவல்களின் மூலம் அமெரிக்கா எவ்வாறு வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றதென்ற தகல்களை அறிந்துகொள்ள முடியும் என விக்கிலீக்ஸ் இணையம் தெரிவித்துள்ளது.

தகவல்களை வெளியிடக் கூடாது என அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1966ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரையிலான தகவல்கள் வெளியிடப்படவுள்ளன.

அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் மற்றும் தூதுவரலாயங்கள் 274 நாடுகளுடன் மேற்கொண்ட தகவல்கள் தொடர்பான தரவுகள் அம்பலப்படுத்தப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக