கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் உதவி அரச அதிபர் பிரிவுகளில் உள்ள வெற்றிடங்களுக்கு சிங்களப் பணியாளர்களை நியமிப்பதை சிறீலங்கா அரசு நிறுத்த வேண்டும் என அகில இலங்கை அரச பணியாளர் சங்கம் சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் அதன் தலைவர் எஸ் லோகநாதன் தெரிவித்துள்ளதாவது:
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள அரச திணைக்களங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு அந்த மாவட்டங்களில் உள்ளவர்களை நியமனம் செய்யாது, சப்பிரகமுவா மாகாணத்தில் இருந்து பெரும்பான்மை இனத்தவர்களை சிறீலங்கா அரசு நியமித்து வருகின்றது.
கிழக்கு மாகாணத்தில் பலர் வேலைவாய்ப்பின்றி இருக்கும்போதும், 17 இற்கு மேற்பட்ட சிங்கள இனத்தவர்கள் கிழக்கு மாகணத்தில் உள்ள அரச திணைக்களங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இவ்வாறு புதிதாக நியமனம் பெற்றவர்களை அவர்களின் சொந்த இடத்திற்கு மாற்றுமாறு நாம் அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இந்த மாவட்டங்களில் உள்ள பல தமிழர்கள் அரச நிறுவனங்களில் பல வருடங்களான தற்காலிக ஒப்பந்தங்களின் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் நேர்முகப் பரீட்சைகளுக்கு தோற்றியபோதும் நிரந்தரமாக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக