புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மூலம் ஈழ ஏதிலிகளை அவுஸ்ரேலியாவுக்கு அனுப்ப முயன்ற வழக்கில், பெரியார் திராவிடர் கழக புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
லோகு அய்யப்பன் கைது செய்யப்பட்டதை கண்டித்து பெரியார் திராவிடர் கழகத்தினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் கடலூர், விழுப்புரம், திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக