அண்மையில் சிறீலங்காவின் வடகிழக்கின் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிற்கு சென்று திரும்பிய அவுஸ்திரேலிய மனிதநேய புகைப்பட நிருபர் ஷெலி மொறிஸ், அப்பகுதிகளில் நடந்த கோரங்களையும், தற்போதைய அவலங்களையும் படம்பிடித்துள்ளார்.
அப் புகைப்படங்களை ஒரு தொகுப்பாக கண்காட்சியாக, அவுஸ்திரேலிய தமிழர் பேரவை, விக்டோரிய தொழிறசங்கங்களின் கூட்டமைப்பின் ஆதரவுடன் நாளை வெள்ளிக்கிழமை 19ம் திகதி மாலை 6 மணி முதல், ஞாயிற்றுக்கிழமை 21ம் திகதி மாலை 5 மணி வரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இந்நிகழ்விற்கு முன்னாள் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் இன் நெருங்கிய உறவினரும், மனிதநேய செயற்பாட்டாளருமான வன் டான் ரட் சிறப்புப் பேச்சாளராக கலந்து சிறப்பிக்கினறார். இந்நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதியை ஷெலி மொறிஸ், அவர்கள் வடகிழக்கின் அபிவிருத்திப் பணிகளிற்கு பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக