வெள்ளி, 5 நவம்பர், 2010

யாழ்க் குடாநாட்டை நோக்கிப் படையெடுக்கும் சிங்களவர்கள் சண்டித்தனம்.

யாழ்க் குடாநாட்டை நோக்கிப் படையெடுக்கும் சிங்களவர்களில் சில குறிப்பிட்ட வகையினர் தாம் தங்கும் லொட்ஜ் மற்றும் ஹோட்டல் கட்டணங்களைக் கட்டாமல் செல்வதாக முறையிடப்படுகிறது. சண்டித்தனம் காட்டும் அவர்கள் தங்களுக்குரிய பணத்தைக் கட்டாமல் செல்கிறார்கள். இந்தச் சண்டித்தனமானது நொண்டித்தனத்தையும் பிச்சையெடுக்கும் தன்மையையும் விட படுமோசமானது என்பதை இச்சிங்களவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். பிச்சைக்காரர்களுக்காவது தனிமனித கௌரவம் என்ற ஒன்று உண்டு, இவர்களுக்கு அதுவும் இல்லை என்று முன்னாள் நா.உ சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

பொதுவாக யாழ்ப்பாணத்தில் லொட்ஜில் அல்லது ஹோட்டலில் தங்குகின்ற ஒருவரின் ஒருநாள் கட்டணம் 3000-3500 ரூபா ஆகும். ஆனால் இச்சிங்களவர்களோ லொட்ஜ் உரிமையாளர்களை மிரட்டியபின்னர் ஒரு சதம் கூடச் செலுத்தாமல் செல்லுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன. சிலரோ 500 ரூபாவை மட்டும் நீட்டிவிட்டு தப்பிவிடுகிறார்கள். இதுபோன்ற முறைப்பாடுகள் பல தமக்குக் கிடைத்துள்ளதாக சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக