வெள்ளி, 5 நவம்பர், 2010

யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் பலர் காணமால் போகின்றார்கள்- மட்டுநகர் ஆயர்

யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் திடீர் திடீர் எனப் பலர் காணாமல் போகின்றனர். ஆயுத முனையில் கடத்தப்படுகின்றனர். இவ்வாறான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படல்வேண்டும்.



இவ்வாறு நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னர் சாட்சியமளித்த மட்டு – திருமலை மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தெரிவித்துள்ளார். யுத்த காலத்தின்போது சந்தேகம் என்ற பெயரில் பலர் கைது செய்யப்பட்டு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

இவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை. எந்தவொரு அமைப்பினதும் தொடர்புகளற்ற பெண்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். பலகாலமாகியும் அவர்களுக்கு எதிராக வழங்குத்தொடரப்படவுமில்லை இவர்களை விடுதலை செய்யவுமில்லை.

வடக்கு – கிழக்கு மட்டுமன்றி தென்பகுதியிலும் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளின்போது பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி நட்டஈடு வழங்கப்படவேண்டும் என்றும் ஆயர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக