புதன், 24 நவம்பர், 2010

மியாவ் மியாவ் பூனைக்குட்டி மீசக்கார பூனைக்குட்டி…

தமிழ் இனத்திற்கு தமிழ்தேசம் வேணும் என்று சொல்லும் இந்த மீசக்கார தொல் ஈழத்தமிழருக்கு தமிழீழம் அமைவதை அங்கீகரிக்கவேண்டும் என்று சொல்ல மறந்து விட்டாரா… அல்லது மறுத்துவிட்டாரா…

தமிழ் இனத்திற்காக தமிழ்தேசம் ஒன்று உருவாக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மிஸ்டர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதனை சர்வதேச சமூதாயம் அங்கீகரிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய அவர் கூறியுள்ளதாவது, உலகம் முழுவதும் 10 கோடிதமிழர்கள் உள்ளனர். இந்த தமிழ் இனத்துக்கு என தனியாக ஒரு நாடு கூட இல்லை. தமிழ் தேசம் ஒன்று உருவாக வலியுறுத்தி சென்னையில் அடுத்த மாதம் இறையாண்மை மாநாடு நடத்த உள்ளோம். தமிழக அரசியலில் தி.மு.க, அ.தி.மு.க.வுக்கு அடுத்த 3ஆது பெரிய சக்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உருவாகி உள்ளதாம்.

தமிழ் இனத்திற்கு தமிழ்தேசம் வேணும் என்று சொல்லும் இந்த மீசக்கார தொல் ஈழத்தமிழருக்கு தமிழீழம் அமைவதை அங்கீகரிக்கவேண்டும் என்று சொல்ல மறந்து விட்டாரா… அல்லது மறுத்துவிட்டாரா…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக