ஞாயிறு, 7 நவம்பர், 2010

சிறீலங்கா துடுப்பாட்ட அணியினருக்கு எதிரான போராட்டம்: தமிழர் உரிமைக்கான அவுஸ்திரேலியர்கள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கை

கடந்த புதன் கிழமை நவம்பர்  மூன்றாம் திகதி அவுஸ்திரேலியா மெல்பேனில் அவுஸ்திரேலிய, சிறிலங்கா அணி பங்குபற்றிய ஒருநாள் கிரிக்கற் போட்டியில் “தமிழர் உரிமைகளுக்கான அவுஸ்திரேலியர்களின்“ கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.

போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணையை எதிர்நோக்கியிருக்கும் சிறிலங்கா அரசின் அடக்குமுறைகளை வெளிப்படுத்தியும், குறிப்பாக சிறிலங்காவின் ஆட்லறி படைப்பிரிவு சூட்டாளர் அஜந்தா மென்டிஸ் கலந்துகொள்வதை கண்டித்தும் ஒழுங்குசெய்யப்பட்ட இந்நிகழ்வில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு பல இடதுசாரி அமைப்புக்களும், தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தமது முழுமையான ஆதரவை வழங்கினார்கள். அத்துடன் விக்டோரிய காவல்துறையும் இப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிற்கு, பல சிங்கள சமூகத்தவரின் துஷ்பிரயோகங்களின் மத்தியிலும் தமது முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்கியிருந்தார்கள்.

இங்கு நடைபெற்ற இந் நிகழ்வுகள், உள்ளுர் ஊடகங்களின் கவனத்தையும் ஈர்ந்தன.

இதேபோன்ற ஓர்  கவனயீர்ப்புப் போராட்டம் சிட்னியிலும் நவம்பர்  மாதம் ஐந்தாம் திகதி வெள்ளிக்கிழமை “Voice of Tamils” அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டு, பல உள்ளுர் ஊடகங்களைின் கவனத்தையும் ஈர்ந்தது, இங்கே குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக