இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள சாந்தபுரம் 17 ஆம் வீதிஅம்பாள் நகரைச் சேர்ந்த மக்கள் தம்மைச் சொந்த இடங்களில் மீளக்குடியேற அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கிராமத்தைச் சேர்ந்த 13 குடும்பங்கள் இன்னமும் தற்காலிக கூடாரங்களிலும் கொட்டில்களிலும் போதிய அடிப்படை வசதிகளற்ற நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.இவர்களுடைய பல உடைமைகள்,தொழில் உபகரணங்கள் இன்னமும் அவர்களது வீடுகளில் காணப்படுவதாகவும்கிணறு போன்ற வசதிகள் அங்கு உள்ளதாலும் தம்மை மீளக்குடியமர அனுமதிக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.இதேவேளை, அப்பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் அண்மையில் தனது சொந்த வளவில் உள்ள கொட்டிலை கழற்றி வேறு இடத்தில் அமைக்க முயன்றபோது அப்பகுதி இராணுவத்தினர் அதற்கு அனுமதிக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
சாந்தபுரத்தில் மக்கள் மீளவும் குடியேற அனுமதி வழங்கும் முன் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் மக்கள் தற்காலிகமாக இருந்தபோது சாந்தபுரத்திற்குச் செல்லும் ஒரு வீதியில் மட்டுமே சோதனைச்சாவடி போடப்பட்டு இருந்தது. ஆனால், இப்பொழுது சுமார் நூறு மீற்றர் தூர இடைவெளியில் இரண்டு சோதனைச் சாவடிகள் போடப்பட்டு அனைத்து வாகனங்களும் பாதசாரிகளும் இறக்கி சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே சாந்தபுரத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நடைமுறை மாற்றத்தினால் தாம் மேலும் அச்சமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக