செவ்வாய், 16 நவம்பர், 2010

ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் :சுனில் ஹந்துன்நெத்தி

யாழ்ப்பாணம் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இல்லை; சில ஆயுதக் குழுக்களே கட்டுப்பாட்டைத் தம் கையில் எடுத்துள்ளனர் என்று ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்னெட்டி தெரிவித்துள்ளார்.

சற்று முன் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் சில ஆயுதக் குழுக்கள் செயற்படுகின்றன. சில இடங்களை அவர்கள் தான் தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளனர்.

இந்த ஆயுதக் குழுக்களால் தமது பாதுகாப்புக்கே உத்தரவாதமற்ற நிலை காணப்படுவதாக பொலிஸார் எம்மிடம் கூறுகின்றனர்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக