தம்பாட்டி மீன்பிடிச் சங்க அலுவ லகத்தில் நேற்று அதிகாலை புலிக் கொடி ஏற்றப்பட்டு இருந்ததைத் தாம் கண்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.இது குறித்து ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டதை அடுத்து அவர்களால் புலிக் கொடி அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டது.
இதேவேளை,இந்தக்கொடி ஏற்றப் பட்ட விடயம் குறித்து தம்பாட்டி மீன் பிடிச் சங்கத் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் பொலிஸாரால் விசாரிக்கப் பட்டு, பின்னர் அவர்கள் விடுவிக்கப் பட்டனர் என்று தெரிய வந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக