ஆபிரிக்காவிலிருந்து இந்தோனேஷியா வரையான பாரிய இந்து சமுத்திரம். கடந்த நூற்றாண்டுக்கு ஐரோப்பாவைப் போல் புதிய நூற்றாண்டுக்கான ஒரு வரைபடத்தை இது கொண்டிருக்கலாம். குடிசனப் பரம்பல் ரீதியாகவும், மூலோபாய ரீதியாகவும் 21ம் நூற்றாண்டில் உலகில் இது ஒரு கேந்திர நிலையமாகவும் திகழலாம்.
இதன் காரணமாகததான் இந்து சமுத்திர பிரதேசத்தை எதிர்காலத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டிய ஒரு பிரதேசமாக அமெரிக்கா கருதுகின்றது. இவ்வாறு தெரிவித்துள்ளார் றொபர்ட் டி கப்லான் என்ற செல்வாக்குமிக்க அமெரிக்க எழுத்தாளர். Monsoon: The Indian Ocean and the Future of American Power என்ற தனது நூலிலேயே அவர் இப்படித் தெரிவித்துள்ளார்.
இதில் இலங்கையைப் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளமை சுவாரஸ்யமானதாகும்.
அவர் அந்நூலில் முக்கியமாகத் தெரிவித்துள்ளமை வருமாறு,
1440 இலங்கையின் கரையோர நகரமான காலியில் சீன அட்மிரல் செங் உலகுக்கு ஒரு செய்தியைக் கூறும் வகையில் கல்லொன்றை நாட்டினார். அதில் மூன்று மொழிகளில் அவர் அந்த செய்தியை பதித்திருந்தார்.
சீனமொழி, பாரசீக மொழி மற்றும் தமிழ் என்பனவே இந்த மொழிகள். அந்த செய்தி கூட நினைவு கூரத்தக்கது. றெபர்ட் கப்லான் குறிப்பிட்டுள்ள பிரகாரம் வர்த்தகத்தின் அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்ட சமாதானமான ஒரு உலகுக்காக சீன அட்மிரல் இந்துக் கடவுள்களின் ஆசீர்வாதத்தை வேண்டியிருந்தார்.
பாகிஸ்தானின் கவுதார் துறைமுகம், இலங்கையின் அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்கள் பற்றியும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை சீனாவின் உதவியோடு நிர்மாணிக்கப்பட்ட துறைமுகங்கள். பாகிஸ்தான் மூலோபாய காரணங்களுக்காகவும் அம்பாந்தோட்டை வர்த்தக நோக்கத்துக்காகவும் உருவாக்கப்பட்டவை.
இலங்கையின் அரசியல் நிலைமைகள் பற்றி இந்த நூல் குறிப்பிடுகையில், முன்னாள் யூகோஸ்லாவியாவின் சேர்பியர்கள் போல், ஈரானின் ஷீஆக்களைப் போல், சிங்களவர்கள் குடிசனப் பரம்பல் ரீதியாக பெரும்பான்மையாக உள்ளனர்.
ஆனால் அடிககடி தொந்தரவு தரக்கூடிய சிக்கலான ஆபத்தான சிறுபான்மையுடன் கூடிய பெரும்பான்மையாக உள்ளனர். இந்தோனேஷியா மோதல்கள் மற்றும் நாகரிகங்களின் ஒன்றுகூடலுடன் கூடிய ஒரு இடமாகத் திகழ்வதாக நூலாசிலியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் புவியியல் ரீதியான அரசியல் மனோபாவத்தைப் பதிவு செய்யும் இறுதித்தளமாக இலங்கை திகழ்கிறது. உலகுக்கு வரவேண்டிய புரிந்துணர்வின் அடையாளத்தை வழங்குவதாக பர்மா திகழ்கிறது.
உலக அரசியலின் சர்ச்சைக்குரியத் தளமாக இந்தோனேஷியா திகழ்கிறது. என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக