வெள்ளி, 10 டிசம்பர், 2010

25.000 பேரைக் கொன்ற போர்க்குற்றவாளி டென்மார்க்கில் கைது

1994ம் ஆண்டு ஆபிரிக்காவில் உள்ள ருவாண்டா நாட்டில் குறுங்காலப்பகுதியில் 800.000 பேர் கொல்லப்பட்ட மனிதப்பெரும் படுகொலைகள் நடைபெற்றது தெரிந்ததே. இந்தப் படுகொலையுடன் சம்மந்தப்பட்டு, ருவாண்டா அரச படையில் ஒரு பகுதியை வழிநடாத்திச் சென்று புற்றாரா என்ற நகரத்தை அண்டிய மலைப்பிராந்தியத்தில் சுமார் 25.000 வரையான ருட்டு இன மக்களை வளைத்துக் கொண்டனர். அதன் பின்னர் நடைபெற்ற படுகொலைகளில் இறைச்சி வெட்டும் கடையில் நடப்பதுபோல அனைவரையும் கொன்று குவித்தனர். இந்த 25.000 பேரின் மரணத்தையும் தலைமைதாங்கி நடாத்திய கொடியவனே டென்மார்க்கில் அரசியல் அடைக்கலம் பெற்றிருந்தது தெரியவந்தது. ஏற்கெனவே இருவர் இந்தச் சம்பவத்தில் தொடர்புபட்டு 25 – 30 ஆண்டுகால சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள். 25.000 பேரை சுமார் நான்கு நாட்களில் இவர் தீர்த்துக் கட்டியிருக்கிறார். இந்தக் கைது போர்க் குற்றவாளிகள் பலர் வருங்காலத்தில் கைதாவதற்கான புதிய நம்பிக்கைக் கதவுகளை திறந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக