சேனல் 4 வெளியிட்ட யுத்தகக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், சர்வதேச விசாரணையை மேற்கொள்வது குறித்து ஆலோசிப்பதாக ஐ.நா சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சேனல் 4 சர்வதேச ஊடகம் நேற்று வெளியிட்ட செய்தியில்,
நாம் வெளியிட்டுள்ள காணொளி சான்றுகள் தொடர்பில், சர்வதேச மன்னிப்பு சபையும் சர்வதேச மனித உரிமைகள் ஆணையமும் சிறப்பாக செயற்பட்டுள்ளது.
அந்த அமைப்புக்கள், யுத்த குற்ற விசாரணகளை துரிதமாக மேற்கொள்ளும் இலங்கை அரசாங்கத்தையும், ஐ.நாவையும் வலியுறுத்திவருகின்றன.
இதனால் குறித்த விசாரணைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிப்பதாக ஐ.நா சபை எம்மிடம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கையும் கருத்து தெரிவித்துள்ளது. தற்போது நியமித்துள்ள உள்நாட்டு விசாரணைக்குழு தமது இலக்குகளை அடைந்த பின்னரே இது குறித்து சிந்திக்க முடியும் என தெரிவித்திருப்பதாக சேனல் 4 தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக