அம்பாறை மாவட்டத்தில், தமிழ் மக்கள் அதிகம் வாழும் பிரதேசசெயலகங்களில் அண்மையில் இடம்பெற்ற பணியாளர் நியமனங்களில் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட மதங்களுக்கு இடையிலான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:
அம்பாறை மாவட்டத்தில், தமிழ் மக்கள் அதிகம் வாழும் பிரதேசசெயலகங்களில் அண்மையில் இடம்பெற்ற பணியாளர் நியமனங்களில் 29 பேரில் ஒருவரே தமிழர்
தமிழ் மக்கள் அதிகம் வாழும் பிரதேசங்களில் உள்ள அரச திணைக்களங்களில் சிங்களவர்களை நியமிப்பது, இரு இனங்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் பாதிக்கும்.
இந்த மாவட்டங்களில் பல நூறு தமிழ் இளைஞர்கள் வேலையில்லாது இருக்கின்றனர். ஆனால் வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படும் சிங்களவர்கள் அரச திணைக்களங்களில் நியமிக்கப்படுகின்றனர் என அது மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக