அரச ஆதரவுடன் இயங்கும் ஒட்டுக்குழுவின் தலைவர் பிள்ளையானும் அவரது சகாக்களும் டென்மார்க்கில் வந்திரங்கியுள்ளனர். டென்மார்க்கில் ஓகுஸ் என்ற இடத்தில் இவர்கள் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளதாக அங்கிருந்து உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் கூறுகின்றன. இவர்கள் டென்மார்க்கில் இருக்கும் ஓர் முக்கிய விரோத கும்பல்களுக்கு ஆதரவு கொடுக்கும் ஒருவரின் அழைப்பின் பேரில் வந்துள்ளதாகவும் எதிர்வரும் 24 திகதி நடைபெறவிருக்கும் நத்தார் களியாட்ட விழா ஒன்றில் பங்குபற்றவுள்ளதாகவும் கூறபப்டுகின்றது. இந்த விழாவிற்கு சமூகம் கொடுக்கவெனவே வீசா பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
பிள்ளையான் பல்வேறு கடத்தல் காணாமல் போதல் ஆகியவற்றிற்கு பொறுப்பாக செயற்பட்டவர். குறிப்பாக தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் பணியாளர்கள் உட்பட ஒன்பது பேரை கடத்தி , பாலியல் வல்லுறவு செய்தபின் சித்திரவதை செய்து கொலைசெய்தமைக்கும் பிள்ளையானே பொறுப்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிள்ளையான் அவர்களும் அரச ஆதரவுடன் சேர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர் என்ற வகையில் புலம்பெயர் மக்களின் சீற்றத்திற்கு ஆளாகலாம் என அறியப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக