செவ்வாய், 21 டிசம்பர், 2010

ஆணைக்குழுவை விசாரிக்க ஐ.நா.குழு வருகிறதா?

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர் பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா.சபையின் குழுவுக்கு இலங்கை அரசு அனுமதியளித்துள்ளது.

ஐ.நா.சபை விசாரணை நடத்துவதற்கு இலங்கை அரசு அனுமதியளிக்க மறுத்திருக்குமாயின் நிலை மை மிகவும் தாக்கமானதாக இருந்திருக்கும்.இங்குதான் இலங்கை அரசு சமயோசிதமான முடிபை எடுத்தது. அந்த முடிபு ஐ.நா.சபையின் நிபுணர்கள் குழுவை இலங்கைவர அனுமதிப்பதென்பதாகும்.


இலங்கைவரும் ஐ.நா.சபையின் நிபுணர்கள் குழு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைச் சந்தித்துப் பேசுவதற்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல். எதுவாயினும் ஐ.நா.சபை செயலாளர் பான் கீ மூன் இலங்கையில் நடந்த போர்க்குற்ற விசாரணை கள் தொடர்பில் நிபுணர்கள் குழுவொன்றை நிய மித்தபோது, அவசர அவசரமாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அரசு நியமித்தது. விசாரணைகளும் நடந்தன.

நடந்த விசாரணைகள் தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழு எடுத்த முடிபு என்ன என்பது எதுவுமே தெரியாது. அதே நேரம் வன்னியில் நடந்த யுத்தம் தொடர் பில் இடம்பெற்ற மோசமான- பொதுமக்களைப் பாதித்த- பொதுமக்களைத் தாக்கிய விடயங்களையே கற்றுக்கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழு மேற்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், இதை விடுத்து நாட்டின் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலம் தொட்டு இன்றுவரையான சம்பவங் களை, நிகழ்வுகளை விசாரணைக்கு ஏற்றுக் கொள் ளும் அளவில் குறித்த ஆணைக்குழு தனது விசார ணைப் பரப்பை அகலமாக்கியிருந்தது. ஆணைக்குழு முன் சாட்சியமளித்த ஒருவர் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மனம் நோகாத வகையில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்றார்.

எல்லாவல தேரரோ இலங்கை முழுவதையும் சிங்களவர்களே ஆட்சிசெய்தார்கள் என்று கூறுகின்றார். ஐயா! இதெல்லாம் தேவையா என்ன? வன்னி யுத்தத்தில் இழந்த இழப்புக்களை கூறுவதற்கு வந்தவர்கள் தங்கள் அவலத்தை கூறமுடியாதவர்களாக இருக்கையில், தேவையில்லாதவர்களும் சம்பந்தமில்லாதவர்களும் ஆணைக்குழு முன்தோன்றி சாட்சியமளித்து, இருக்கக்கூடிய ஒற்றுமையையும் தொலைத்து விட்டார்கள்.இப்போது ஐ.நா.சபையின் நிபுணர்கள் குழு இலங்கைக்கு வந்து அந்த ஆணைக்குழுவை சந்திக்கப் போகின்றது.

இந்தச் சந்திப்பில் யாது சொல்லப்படுமோ? நமக்குத் தெரியாது. ஆனால் ஐ.நா.சபையின் நிபுணர் குழு, ஆணைக்குழுவை மட்டுமே சந்தித்துவிட்டுச் செல்லுமாயின், ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் தேவையில்லாத வேலையைச் செய்துவிட்டார் என்றே சொல்ல வேண்டி வரும். எதுவாயினும் இவ்விடத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் மிகவும் நிதானமாகவும் சமயோசி தமாகவும் நடந்துகொள்வது மிகவும் அவசியமான தாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக