தன்மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து உரிய விசாரணைகளை நடத்துவதற்கு இலங்கை அரசு முன்வரவில்லை. பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையில் முறுகல் நிலை, தொய்வு நிலை ஏற்பட் டுள்ளமைக்கு அதுவே காரணம்.
எனினும் எமது வெளிநாட்டமைச்சைப் பிரதிநிதித் துவம் செய்யும் தூதுவர் ஒருவரை விரைவில் இலங்கைக்கு அனுப்ப உள்ளோம். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்.
இங்குள்ள “ஸ்கை நியூஸ்” தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் தமது செவ்வியில் மேலும் தெரிவித்தவை வரு மாறு:
பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சைப் பிரதிநிதித்துவப் படுத்தும் தூதுவர் ஒருவரை விரை வில் இலங்கைக்கு அனுப்ப வுள்ளோம். எனது தலைமையி லான பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சும்,லியாம் பொக்ஸ் தலைமையிலான பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சும் இலங்கை யுடன் மிக நெருக்கமான உற வைப் பேணி வருகின்றன. இந்த அமைச்சுகளுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் கடந்த காலங் களில் இலங்கையுடன் இவ் வளவு நெருக்கமாக இருந்ததேயில்லை.
அத்துடன், இலங்கையுடனான நட்புறவு பிரிட்டனுக்கு மிகுந்த நன்மையளிக்கும். இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள வேண்டும்.
இலங்கை அரசு நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேலும் முன்னேற்ற வேண்டி இருக்கின்றது. அதேபோன்றே,வன்னியில் இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்ற விசாரணைகள் விடயங்களில் உண்மை நிலையை அறிவதற்கு உரிய விசாரணைகளை நடத்த வேண்டும். இவ்விடயத்தில் இலங்கை அரசு அதிக கனவம் செலுத்துதல் வேண்டும். எனவேதான் இலங்கை உடனான உறவில் முறுகல், சிறிய தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கைத் தரப்பினரைச் சந்தித்துப் பேச்சு நடத்த நாம் விரும்புகின்றோம்.
இலங்கை வெளிவிவகார அமைச்சரின் லண்டன் விஜயத்தின்போது இவை தொடர்பில் நான் சந்தித்துப் பேச்சு நடத்தினேன். இலங்கை அரசுத் தரப்பினரின் நாடித்துடிப்பை நன்கு அறிந்தவர் லியாம் பொக்ஸ். இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த 14 வருடங்களுக்கு முன் நேரடியாக செயற்பட்டவர் இப்படி அவர் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ் இலங்கைக்கு தனது தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொள்ளவிருந்த நிலையில் அவ்விஜயத்தைத் திடீரென்று ரத்துச் செய்தார். இலங்கைக்கான விஜயத்தை வேறொரு தினத்திற்கு அவர் ஒத்திவைத்தார். பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்கின் கோபத்தை சம்பாதிக்க வேண்டிவரும் என்பதாலேயே பொக்ஸ் தனது இலங்கை விஜயத்தை ஒத்தி வைத்தார் என்று ஊடகங்கள் பூடகமாக செய்திகளைப் பிரசுரித்திருந்தன.
லண்டன் ஒக்ஸ்போட் யூனியனில் உரையாற்றச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரை ரத்துச் செய்யப்பட்டதும், ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக அங்குள்ள புலம்பெயர்ந்தவர்களினால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் கொழும்பு லண்டன் நட்புறவில் விரிசலை பெரியளவில் ஏற்படுத்தாத போதிலும், பல்வேறு விமர்சனங்களுக்குத் தள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக