இலங்கை அமைச்சரும் துணை ஆயுதக்குழுவொன்றின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக்கோரி சட்டத்தரணி புகழேந்தி செய்துள்ள மனுவை, விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்று கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
25 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பந்தப்பட்டுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக்கோரி சட்டத்தரணி புகழேந்தி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்றைய தினம் விசாரணைக்கு ஏற்றது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக