ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் இலங்கை தொடர்பிலான நிபுணர் குழுவிற்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ள இடம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இச்சந்திப்பு இலங்கையிலா அல்லது இலங்கைக்கு வெளியிலா நடைபெறும் என்பது தொடர்பிலும் தெளிவின்மை காணப்படுகின்றது.
இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நிபுணர் குழு சந்திக்கும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் ஊடக பேச்சாளர் பர்ஹான் ஹக் பி.பி.சி.யின் சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்தார்.
ஆனால் சந்திப்பு எங்கு இடம்பெறும் என்பதில் நிச்சயமில்லை என்றார் அவர்.
எனினும் ஊடக பேச்சாளர் இலங்கைக்கான விஜயத்தை உறுதிப்படுத்த மறுத்துவிட்டார்.
நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமா அல்லது நல்லிணக்க ஆணைக்குழுவை வேறு எங்காவது சந்திக்குமா என்பதை தங்களால் உறுதிப்படுத்த முடியாது என பர்ஹான் ஹக் குறிப்பிட்டார்.
இதேவேளை நிபுணர் குழுவிற்கு சாட்சியங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை இந்த வருட இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் செயலகத்தில் இடம்பெற்ற நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஹக் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக