வியாழன், 23 டிசம்பர், 2010

பான்-கீ-மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு ஒரு போலியானது - கலாநிதி விக்ரமபாகு

சிறிலங்காவின் போர்க் குற்றங்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட  நிபுணர்கள்  ஒரு போலியான குழு என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். 
அவர் மேலும் தெரிவிக்கையில், சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கைகளில் படிந்துள்ள இரத்த கறைகளுக்கு வெள்ளையடிப்பதற்காகவே இந்த நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த நோக்கிலேயே அது சிறிலங்காவுக்கு வரவும் உள்ளது எனக் குறிப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அரசின் போர்க்குற்ற நடவடிக்கைகளுக்கு, ஐ.நா செயலர்  பான்-கீ-மூனுக்குப் பின்னால் அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா போன்ற முதலாளித்துவ சக்திகள்  இருந்தன. இவர்களே சிறிலங்கா  அரசாங்கம் யுத்தம் செய்வதற்கான ஆயுதங்களையும் நிதியுதவிகளையும் வழங்கினர். இவர்கள் நியமித்துள்ள குழு. இந்தப் போர்க்குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் என்பதோ, தண்டிக்கும் என்பதோ, வெறும் மாயை என விக்ரமபாகு கருணாரட்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கருத்துத் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு விடயத்தில் சிறிலங்காவிடம் தெளிவான கருத்து நிலை இல்லை எனக்கறிப்பிட்டார். மேலும், அரசின் ஒருதரப்பு,  நிபுணர்கள் குழுவை வரவேற்கையில், மற்றுமொரு தரப்பு எதிர்ப்பது என்பது, அரசின் இரட்டைத் தன்மையை வெளிப்படுத்துவதுடன், அரசின் நிலையற்ற தன்மையை வெளிப்படுத்துவதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக