வட தென் கொரிய எல்லையில், பயிற்சிகளுடன் கூடிய இராணுவ நடவடிக்கை ஒத்திகைகளை தென் கொரியா இன்று மேற்கொண்டதுதென் கொரியாவின் தலைநகர் சீயோலில் இருந்து, நூறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மலைப்பிரதேசத்தில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. 45க்கும் அதிகமான போர் ஒத்திகைகளை தென்கொரியா மேற்கொண்டிருந்த போதும், இன்று நடந்த ஒத்திகையானது, குளிர்காலத்தில் நடத்தப்பட்ட, மிகப் பெரிய ஒத்திகை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் வடகொரியா தரப்பில் அதன் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், எத்தகைய சவால்களையும் சமாளிக்கத் தமது நாடு தயாராக உள்ளதாகவும், நீதிக்கான புனிதப் போர் தொடங்கப்படுமாயின், தென்கொரியாவுக்கு சரியான பதிலை அணு ஆயுதம் மூலம் வழங்கத் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்தாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இரு நாடுகளுக்கும் இடையில் போர் முறுகல் நிலை தொடர்ந்த வண்ணமிருப்பதும், உலக நாடுகள் பலவும் அந்நிலையைத் தவிர்க்க முயற்சி எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக