வவுனியா செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள கதிர்காமர் நலன்புரி முகாமின் இராணுவப் பொறுப்பதிகாரி மேஜர் அபயக்கோன் முகாம் மக்கள் மீது பாலியல் கெடுபிடி உட்பட்ட பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்திவருவதாக அங்கிருந்து மக்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,முகாம் மக்களுக்கு வழங்கவென அனுப்பிவைக்கப்படுகின்ற நிவாரணம் உட்பட்ட பொருட்கள் குறித்த இராணுவ அதிகாரியினால் சூறையாடப்பட்டு வருகின்றன.
மக்களுக்கு வழங்கவென பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களினால் கொண்டு செல்லப்படுகின்ற நிவாரணப் பொருட்களை அதே ஊர்களில் ஏற்றி விற்பனை நிலையங்களுக்கும், தனது ஊருக்கும் அபயக்கோன் அனுப்பிவைப்பதாக மக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சில நாட்களுக்குள் மட்டும் பத்திற்கும் மேற்பட்ட மூடைகள் இவ்வாறு அனுப்பப்பட்டதை முகாம் மக்கள் உறுதி செய்துள்ளனர். இவற்றில் பென்சில், கொப்பி முதல் உணவு வரையில் அனைத்துப் பொருட்களிலும் சூறையாடல் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் அனுராதபுரம் றொட்றிக் கழகம் என்ற அமைப்பு முகாம் மக்களுக்கு வழங்கவென அனுப்பிவைத்த பொருட்களை, மக்களை அழைத்து அவர்கள் மீது வீசி எறிந்ததாகவும், பிச்சைக்காரர்கள் பிச்சைக்கு அடிபடுவது போல் அடிபட்டே மக்கள் புடைவைகளைப் பெற நேர்ந்ததாகவும் முகாம் மக்கள் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை மக்களை ஒன்றுகூடல் என அழைப்பு விடுக்கின்ற மேஜர் அபயக்கோன் அவர்களைப் பார்த்து காட்டுமிராண்டிகள், நாய்தமிழன், உண்பதற்கு வழியில்லாத தமிழர், பிரபாரகனிடம் இருந்த கேவலம் கெட்டவர்கள் போன்ற வார்த்தைகளால் திட்டுவதாக அவர்கள் கவலை வெளியிட்டனர்.
இதேவேளை தனது அலுவலகத்தில் பணியாற்றவென பெண்களை அழைத்து வேலைகளைத் திணித்துவருவதாகவும், இரவு வேளைகளில் குறித்த பெண்களின் வீடுகளுக்குச் சென்று பாலியல் கெடுபிடிகளில் ஈடுபட்டு வருவதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
மிகப் பாரிய புலனாய்வுக் கட்டமைப்பைக் கொண்ட அரசினால் இவ்வாறான நடவடிக்கைகளை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்று முகாம் அரச அலுவலகத்தில் பணியாற்றும் அரச அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மக்களுக்கு வழங்கவென பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களினால் கொண்டு செல்லப்படுகின்ற நிவாரணப் பொருட்களை அதே ஊர்களில் ஏற்றி விற்பனை நிலையங்களுக்கும், தனது ஊருக்கும் அபயக்கோன் அனுப்பிவைப்பதாக மக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.சில நாட்களுக்குள் மட்டும் பத்திற்கும் மேற்பட்ட மூடைகள் இவ்வாறு அனுப்பப்பட்டதை முகாம் மக்கள் உறுதி செய்துள்ளனர். இவற்றில் பென்சில், கொப்பி முதல் உணவு வரையில் அனைத்துப் பொருட்களிலும் சூறையாடல் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.சில நாட்களுக்கு முன்னர் அனுராதபுரம் றொட்றிக் கழகம் என்ற அமைப்பு முகாம் மக்களுக்கு வழங்கவென அனுப்பிவைத்த பொருட்களை, மக்களை அழைத்து அவர்கள் மீது வீசி எறிந்ததாகவும், பிச்சைக்காரர்கள் பிச்சைக்கு அடிபடுவது போல் அடிபட்டே மக்கள் புடைவைகளைப் பெற நேர்ந்ததாகவும் முகாம் மக்கள் மேலும் தெரிவித்தனர்.இதேவேளை மக்களை ஒன்றுகூடல் என அழைப்பு விடுக்கின்ற மேஜர் அபயக்கோன் அவர்களைப் பார்த்து காட்டுமிராண்டிகள், நாய்தமிழன், உண்பதற்கு வழியில்லாத தமிழர், பிரபாரகனிடம் இருந்த கேவலம் கெட்டவர்கள் போன்ற வார்த்தைகளால் திட்டுவதாக அவர்கள் கவலை வெளியிட்டனர்.இதேவேளை தனது அலுவலகத்தில் பணியாற்றவென பெண்களை அழைத்து வேலைகளைத் திணித்துவருவதாகவும், இரவு வேளைகளில் குறித்த பெண்களின் வீடுகளுக்குச் சென்று பாலியல் கெடுபிடிகளில் ஈடுபட்டு வருவதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.மிகப் பாரிய புலனாய்வுக் கட்டமைப்பைக் கொண்ட அரசினால் இவ்வாறான நடவடிக்கைகளை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்று முகாம் அரச அலுவலகத்தில் பணியாற்றும் அரச அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நன்றி :சரிதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக