வவுனியா செட்டிகுளம் கதிர்காமர் நலன்புரிமுகாமில் உள்ள அனாதைப் பிள்ளைகளுக்கு வழங்கவென யுனிசெப் நிறுவனத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட பாடசாலை உபணங்கள் முகாம் இராணுவப் பொறுப்பதிகாரியினால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடந்த இரவு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து எமக்குக் கிடைக்கப்பெற்ற உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் படி அங்கு வாழும் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட அநாதரவான சிறுவர்களுக்கு வழங்கவென யுனிசெப் நிறுவனத்தினால் அனுப்பப்பட்ட சப்பாத்து, உடைகள், தொப்பிகள் உட்பட்ட பொருட்களே சூறையாடப்பட்டுள்ளன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
அனாதைப் பிள்ளைகளுக்கு வழங்கவென குறித்த நிறுவனத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட பொருட்களில் 250 சப்பாத்துக்களில் 35 மட்டுமே பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கொப்பி உட்பட்ட கற்றல் உபகரணங்கள் 1900 பேருக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் 640 மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
இதனைவிடவும் 500 உடைகளும், 650 தொப்பிகளும் வழங்கவென யுனிசெப்பினால் அனுப்பப்பட்ட போதிலும் எவையும் உரியவர்களுக்கு வழங்கப்படாமல் வாகனம் ஒன்றில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக